Baby thiya medical help

குழந்தை தியாவுக்கு மருத்துவ உதவி நம்ம பசங்க அறக்கட்டளை சார்பில் இன்று (22-09-2024) குழந்தை தியாவுக்கு (2 மாத குழந்தை) மருத்துவ உதவியாக ₹1,00,000/- (ஒரு லட்சம் ரூபாய்) குழந்தையின் அம்மா & அப்பாவிடம் கொடுத்த போது. 115 பேர் இந்த நன்கொடைகள் கொடுத்து உதவியிருந்தார்கள். நன்கொடைகள் கொடுத்த அனைவருக்கும் எங்கள் நன்றியும் பாராட்டுக்களும். 🙏இடம்: குழி விளை,எட்டணி, கருங்கல், கன்னியாகுமாரி மாவட்டம். குழந்தை 6 மாதத்தில் 1 கிலோ எடையில் (குறை பிறசவம்) பிறந்தது. பிறந்தது முதல் இது நாள் வரை நிம்ஸ் மருத்துவ மனை, நெய்யாற்றின் கரையி-ல் அடை காக்கும் கருவி (incubator )-ல் இரண்டு மாதங்களாக வைத்து பராமரித்து வருகிறர்கள், இனிமேலும் ஒரு மாதத்திற்கு மேல் வைத்திருக்க வேண்டிய சூழ்நிலை மற்றும் தொடர் மருத்துவம் தேவைப்படுகிறது.
Treatment Help
நம்ம பசங்க அறக்கட்டளை சார்பில் இன்று (11-09-2024) திரு. ரெகு பத்ம காந்தன், அழகாண்பரை, கன்னியாகுமாரி மாவட்டம். ரெகு விவசாய வேலை செய்யும்போது எதிர்பாராமல் கீழே விழுந்ததில் காலில் முறிவு ஏற்பட்டு தற்போது நாகர்கோவில் திரவியம் எலும்பு முறிவு மருத்துவமனையில் முதல் கட்ட அறுவை சிசிட்டை செய்து பலன் கிடைக்காததால் மீண்டும் சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் உள்ளார். மருத்துவ உதவியாக ₹5,000/- வழங்கப்பட்டது. நன்கொடைகள் கொடுத்து உதவிய அனைவருக்கும் நன்றியும் பாராட்டுக்களும். 🙏🙏🙏
Aarthi Medical Help
நம்ம பசங்க அறக்கட்டளை சார்பில் இன்று (08-09-2024) தங்கை ஆர்த்தி, வயது 18 பயணம், உண்ணாமலக்கடை. ஆர்த்தி வலிப்பு நோய் மற்றும் மூளை வளர்சி குறைபாட்டால் அவதிப்பட்டு வருகிறார். மருத்துவ உதவியாக ₹10,000/- வழங்கப்பட்டது. நன்கொடைகள் கொடுத்து உதவிய அனைவருக்கும் நன்றியும் பாராட்டுக்களும். 🙏🙏🙏