nptkk.org

குழந்தை தியாவுக்கு மருத்துவ உதவி

நம்ம பசங்க அறக்கட்டளை சார்பில் இன்று (22-09-2024) குழந்தை தியாவுக்கு (2 மாத குழந்தை) மருத்துவ உதவியாக ₹1,00,000/- (ஒரு லட்சம் ரூபாய்) குழந்தையின் அம்மா & அப்பாவிடம் கொடுத்த போது.

115 பேர் இந்த நன்கொடைகள் கொடுத்து உதவியிருந்தார்கள். நன்கொடைகள் கொடுத்த அனைவருக்கும் எங்கள் நன்றியும் பாராட்டுக்களும். 🙏
இடம்: குழி விளை,எட்டணி, கருங்கல், கன்னியாகுமாரி மாவட்டம்.

குழந்தை 6 மாதத்தில் 1 கிலோ எடையில் (குறை பிறசவம்) பிறந்தது. பிறந்தது முதல் இது நாள் வரை நிம்ஸ் மருத்துவ மனை, நெய்யாற்றின் கரையி-ல் அடை காக்கும் கருவி (incubator )-ல் இரண்டு மாதங்களாக வைத்து பராமரித்து வருகிறர்கள், இனிமேலும் ஒரு மாதத்திற்கு மேல் வைத்திருக்க வேண்டிய சூழ்நிலை மற்றும் தொடர் மருத்துவம் தேவைப்படுகிறது.